35,000 ஊழியர்கள் பணி நீக்கமா?! HSBC வங்கி விளக்கம்.!

அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 35,000 ஊழியர்களை நீக்கப்போவதாக HSBC வங்கி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தது. ஆனால், அந்த முடிவை தற்போது வங்கி நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் தீவிரமடைவதற்கு முன்னர் கடந்த பிப்ரவரி மாதமே எச்.எஸ்.பி.சி வங்கியானது, அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 35,000 ஊழியர்களை நீக்கப்போவதாகவும், இந்த நடவடிக்கை படிப்படியாக நடைபெறும் எனவும் கூறப்பட்டது. இந்த செய்தி வங்கி ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், பல நிறுவனங்கள் முடங்கி போய் உள்ளதால், தற்போது பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டால் HSBC வங்கி ஊழியர்கள் வேலையின்றி தவிப்பார்கள். எனவே, தங்கள் வங்கி ஊழியர்கள் வேலை தேடி தவிக்கும் நிலையை விரும்பவில்லை என கூறி இந்த பணி நீக்க நடவடிக்கையை தற்போது நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

ஆனால், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வருவாய் பாதியாக குறைந்துள்ளது எனவும் அந்த வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.