31.7 C
Chennai
Friday, June 2, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

ராஜீவ் காந்தியின் 32வது நினைவுநாள்..! கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அஞ்சலி..!

ராஜீவ் காந்தியின் 32வது நினைவு நாளை முன்னிட்டு கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள கேபிசிசி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவகுமார் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, பயங்கரவாதத்தால் பாஜகவை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை. நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறோம் என்று பாஜக தொடர்ந்து கூறுகிறது. ஆனால் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற பல காங்கிரஸ் தலைவர்கள் பயங்கரவாத தாக்குதலில் இறந்தனர் என்று கூறினார்.

முன்னதாக, டெல்லியில் உள்ள வீரபூமியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.