2-வது சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த 323 இந்தியர்கள் .!

  • நேற்று டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வுகான் நகரில் இருந்த 324 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் அழைத்து வந்தனர்.
  • இன்று காலை  2-வது சிறப்பு விமானம் மூலம் 323 இந்தியர்கள் டெல்லி வந்தனர்.

முதல் விமானம்:

நேற்று டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வுகான் நகரில் இருந்த 324 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் அழைத்து வந்தனர். அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்களில் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.

இரண்டாவது விமானம்:

இந்நிலையில் நேற்று பிற்பகல் சீனாவின் வுகான் பகுதியில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வர இரண்டாவது சிறப்பு விமானம் சென்றது.இதையெடுத்து 323 இந்தியர்களுடன் அந்த சிறப்பு விமானம் இன்று காலை 9.45 மணிக்கு டெல்லி வந்தது. இவர்களில் 7 பேர் மாலத்தீவை சேர்ந்தவர்கள்இவர்கள் அனைவருக்கும் பரிசோதனைக்கு நடத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.

கொரோனா:

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. தற்போது கொரோனா வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் போன்ற பல நகரங்களில் பரவி உள்ளது. முதலில் இந்த வைரசால் 3 பேர் மட்டுமே பலியானதாக அதிகாரிகள் கூறினர்.பின்னர் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டு வருகிறது.

பலி எண்ணிக்கை:

இந்த கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்த வைரசால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சீனா அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

முதல் உயிரிழப்பு:

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். இதுவரை சீனாவில் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளனர். ஆனால் முதல் முறையாக சீனாவை தவிர மற்ற நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்தது இதுவே முதல் முதல்முறையாகும்.இதனால் மொத்தமாக கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்து உள்ளது.

 

 

author avatar
Dinasuvadu desk