32 -வருடங்கள் கழித்து பாபர் அசாம் செய்த சாதனை !

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில்  நடைபெற்றது.இப்போட்டி டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 237 ரன்கள் சேர்த்தனர்.பின்னர் களமிறங்கிய  பாகிஸ்தான் அணி 49.1 ஓவரில் 4 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்து  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் தொடக்க வீரர்கள் சொதப்பலாக விளையாட மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய பாபர் அசாம் தனது அதிரடி ஆட்டத்தால் 127 பந்தில் 101 ரன்கள் எடுத்து கடைசிவரை அட்டமிழக்காமல் இருந்தார்.
இப்போட்டியில் 101 ரன்னில் 11 பவுண்டரி விளாசினார்.இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் உலகக்கோப்பையில் 3 -வது விக்கெட்டுக்கு களமிறங்கி  சதம் அடித்த இரண்டாவது  வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றார்.
மேலும் இதற்கு முன்முதன் முறையாக 1987 -ம் ஆண்டு நடந்த உலககோப்பையில் சலீம் மாலிக் 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கி சதம் அடித்தார்.அதன் பின்னர் தற்போது பாபர் அசாம் தான் அடித்து உள்ளார்.
சலீம் மாலிக் (1987)
பாபர் அசாம் (2019) *
 

author avatar
murugan