நம்பர் 1 கிரீடத்தை இழந்த ரவி பிஷ்னோய், சுப்மான் கில். பாபர் அசாம் மீண்டும் முதலிடம்…!

ஐசிசி சமீபத்திய தரவரிசையை புதன்கிழமை வெளியிட்டது. ஒருநாள் போட்டித் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த சுப்மான் கில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஐசிசி புதன்கிழமை வெளியிட்ட ஒருநாள் போட்டித் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் புள்ளி பட்டியலில் 824 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் சுப்மான் கில் 810 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். நட்சத்திர பேட்ஸ்மேன் … Read more

பாபர் அசாமை ஓரம்கட்டி.. பாகிஸ்தானிலும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர் சுப்மான் கில்!

Shubman Gill

2023-ஆம் ஆண்டு முடிவடையும் இருக்கும் நிலையில், கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட முக்கியமான நிகழ்வுகள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் உள்ளிட்டவை குறித்து பட்டியல் வெளியிடப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், இந்த ஆண்டில் கூகுளில் அதிகளவில் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியானது. அதன்படி, உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் டாப் 10 பட்டியலில், உலகின் முன்னணி வீரர்கள் சிலரது பெயர் இடம் பெறவில்லை. … Read more

2022ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட்டர் விருது! ஐசிசி வெளியிட்ட பட்டியல்.!

2022 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்களை ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசி அமைப்பானது ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட்டில் சிறந்து விளையாடும் வீரர்களை விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட்டர் விருதுக்காக  பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், ஆஸ்திரேலியா லெக் ஸ்பின்னர் ஆடம் ஜம்பா, ஜிம்பாப்வே ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா மற்றும் மேற்கிந்திய தீவுகள் விக்கெட் … Read more

பாபர் அசாம் செல்ஃபிஷா? வார்த்தைகளை பார்த்து பேசுங்க கம்பிர் – ஷாஹித் அப்ரிடி

பாபர் அசாம் குறித்து கருத்து தெரிவித்த கவுதம் கம்பிருக்கு, பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி பதிலளித்துள்ளார். பாபர் அசாமின் தற்போதைய பேட்டிங் ஃபார்ம் மற்றும் டி-20 உலகக்கோப்பையில் பாபர் தலைமையில் பாகிஸ்தான் அணி விளையாடி வரும் நிலையை பார்த்து கவுதம் கம்பிர், பாபர் அசாம் குறித்து ஒரு கருத்து தெரிவித்திருந்தார். அவர் கூறியதாவது, பாபர் தன்னைப் பற்றி யோசிக்காமல் அணியைப் பற்றி யோசித்து விளையாட வேண்டும். பாபர் மிடில் ஆர்டரில் இறங்கி விளையாட வேண்டும், ஃபக்கார் … Read more

டி20 உலகக் கோப்பைக்கான புதிய ஜெர்சி யை வெளியிட்டது பாகிஸ்தானின் அணி

அக்டோபர் 16, ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி தனது புதிய ஜெர்சி யை அறிமுகப்படுத்தியுள்ளது. டி-20 உலகக்கோப்பை போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தயாராகிக்கொண்டு வருகின்றனர். கடந்த வியாழன் அன்று பாகிஸ்தான் அணி, உலகக்கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது. நேற்று திங்கள் கிழமை பாகிஸ்தான் அணி, உலகக்கோப்பை போட்டிக்கான தனது புது ஜெர்சி யை அறிமுகப்படுத்தியது. இது குறித்து … Read more

பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற பாபர் அசாம் கவர் டிரைவ்.!

பாகிஸ்தான் அணியின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் பாபர் அசாம், அவர் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். நவீன தலைமுறையின் மிகச் சிறந்த பேட்டர்களில் பாபர் அசாமும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. குறுகிய காலத்தில் அவரது சாதனை மற்றும் திறமை மாசற்ற திறமைக்கு சான்றாகும். பாபர், பேட்டிங் ஆடுவதை மேலும் எளிதாக இருப்பது போல் ஆக்குகிறார். பாபர் அசாமின் முத்திரை ஷாட்களில் ஒன்றான கவர் டிரைவ், வெகு சில வீரர்களே இந்த … Read more

ஏப்ரல் மாதத்தின் ஐசிசியின் சிறந்த வீரராக பாபர் அசாம் தேர்வு.!!

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட  காரணமாக, ஏப்ரல் மாதத்துக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தென்னாபிரிக்கா – பாகிஸ்தான் அணிக்கு இடையே நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அசாம் 82 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார். இதனால் ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 865 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தார்.  இந்த … Read more

டி20 தரவரிசை பட்டியலில் முன்னேறிய பாபர் அசாம்.!!

டி 20 தரவரிசை பட்டியலை ஐசிசி நிர்வாகம் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 4 டி- 20 ஓவர் போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான 20 ஓவர் போட்டிகள் நடைபெற்று வந்தது. 4 போட்டிகளை கொண்ட டி20  தொடரை  3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான்கைப்பற்றியது. இந்த நிலையில் … Read more

கோலியின் நம்பர் 1 பட்டத்தை பறித்த பாகிஸ்தான் வீரர்..! யார் தெரியுமா .?

பாபர் ஆசாம் ஐசிசி ஒருநாள் தரவரிசயில் கோலியை பின்னுக்குத் தள்ளினார். ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பர் 1 ஒருநாள் பேட்ஸ்மேனாக ஆனார். 865 புள்ளிகளுடன் பாபர் ஐ.சி.சி தரவரிசை அட்டவணையில் முதலிடம் பிடித்தார். கோலி இப்போது 857 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாபர் இந்திய கேப்டன் கோலியை விட எட்டு புள்ளிகள் முன்னிலையில் உள்ளார் என்று ஐசிசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் ரோஹித் சர்மா 825 புள்ளிகளுடன் … Read more

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் டி 20 ஐ தொடரிலிருந்து விலகல்..!

பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து t20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.  வருகின்ற 18-ம் தேதி முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் t20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஐசிசி அறிவித்துள்ளது.  பயிற்சியின் போது பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் ஆசாமின் வலது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது.  இதன் காரணமாக  பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் டி 20 ஐ தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். JUST … Read more