4 ஆண்டுகளில் விளம்பரத்திற்காக ரூ. 300 கோடி செலவு தெலுங்கானா அரசு.!

பொது மற்றும் நல்லாட்சிக்கான பாதுகாப்பு சங்கம் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தெலுங்கானா அரசு 2014 ஜூன் முதல் 2018 அக்டோபர் வரை விளம்பரத்திற்காக சுமார் ரூ .300 கோடி செலவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த தொகையில் சுவரொட்டிகள், தொலைக்காட்சி சேனல்கள் , வானொலி போன்றவை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா அரசு மொத்த செலவினங்களை இரண்டு தலைகளாகப் பிரித்துள்ளது. அதில், வெளிப்புற ஊடக நிறுவனங்களுக்கு செலவழித்த பணம் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் செலவழித்த பணம். வெளிப்புற ஊடக நிறுவனங்களுக்காக சுமார் 177 கோடி ரூபாயும், தொலைக்காட்சி சேனல்களுக்காக சுமார் 120 கோடி ரூபாயும் தெலுங்கானா அரசு செலவிட்டுள்ளது.

ஆரம்பத்தில், 2014-2015-ஆம் ஆண்டில், தெலுங்கானா அரசு அடுத்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகவே செலவு செய்துள்ளது. பின்னர், ஒவ்வொரு ஆண்டும், செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. முதல் ஆண்டில், தெலுங்கானா உருவாக்கம் தினத்தின் விளம்பரம் மற்றும் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் பதவியேற்பு விழாவின் விளம்பரம் ஆகியவற்றில் அதிகபட்ச செலவு செய்யப்பட்டது.

2015-16 ஆம் ஆண்டில், பெரும்பான்மையான செலவு தெலுங்கானா உருவாக்கம் தினம், கோதாவரி புஷ்கரலு மற்றும் மேடரம் ஜதாரா ஆகிய நாட்களில் செலவிடப்பட்டது. 2017 ஆம் ஆண்டில், ஹரிதா ஹராம், கிருஷ்ணா புஷ்கராலு போன்றவற்றுக்காக பெரும் தொகை செலவிடப்பட்டது.

மேலும், அதே ஆண்டில் இவான்கா டிரம்பின் ஹைதராபாத் பயணத்தின் போது சுமார் 8.5 கோடி ரூபாய் விளம்பரத்திற்காக செலவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan

Leave a Comment