மதுரை சித்திரை திருவிழாவை காண வந்த 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு.!

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை காண வந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

மதுரையில் உலகபுழ்பெற்ற சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர்வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்த்ர்கள் உலகெங்கிலும் இருந்து மதுரைக்கு வந்து இருந்தனர்.

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை காண வந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். விளாச்சேரியை சேர்ந்த 17 வயது சிறுவன், அதே பகுதியைச் சேர்ந்த காசி மற்றும் அடையாளம் தெரியாத இளைஞர் ஆகிய 3 சடலங்கள் கல்பாலம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் போது, பொதுமக்கள் அனைவரும் நீராடுவது வழக்கம்.

கத்தி குத்து:

இதற்கிடையில், இந்த திருவிழாவை காண வந்த ஒரு 23 வயது மதிக்கத்தக்க இளைஞரை, அங்கு கூட்டத்தில் சில மர்ம நபர்களால் கத்தி உள்ளிட்ட கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிந்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.