மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்…அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

நடிங்கர் சிவகார்த்திகேயன் தற்போது தேசிய விருது இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். மிஷ்கின், சரிதா, யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

Maaveeran
Maaveeran Image source Twitter ShanthiTalkies
படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான பரத் சங்கர் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து தற்போது சில காரணங்களால் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டு புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கிடையில், சிவகார்த்திகேயன் காஷ்மீரில் ‘ sk 21’ படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.