3 மாத கர்ப்பிணி பெண் வேலைக்கு தகுதியற்றவர்- எஸ்பிஐ-க்கு வலுக்கும் எதிர்ப்பு ..!

பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) புதிய வழிகாட்டுதலில், மூன்று மாத கர்ப்பிணி பெண் ஊழியர்களை அலுவலகத்திற்கு வர வங்கி அனுமதிக்க மறுத்துள்ளது. 

நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) தனது புதிதாக ஆட்சேர்ப்பு , பதவி உயர்வுகளுக்கான சமீபத்திய மருத்துவ உடற்தகுதி வழிகாட்டுதல்களில், 3 மாதத்திற்கு மேலான கர்ப்பிணி பெண்கள் பணிக்கு சேரும் தகுதி இருந்தாலும், அவர்  தற்காலிகமாக தகுதியற்றவர்களாக கருத வேண்டும்.

தேர்வு செய்யப்பட்டுடன் பணி வழங்குவதை தவிர்க்க வேண்டும். குழந்தை பெற்ற பிறகு 4 மாதங்கள் பிறகு தான் அந்த பெண்க்கு பணி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. வங்கியின் இந்த புதிய ஆணைக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் அதிருப்தி தெரிவித்து வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

3 மாதங்களுக்கும் மேலான கர்ப்பிணிப் பெண்கள் பணியில் சேருவதைத் தடுக்கவும், அவர்களை ‘தற்காலிகமாக தகுதியற்றவர்களாக’ மாற்றவும் பாரத ஸ்டேட் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது பாரபட்சமானது மற்றும் சட்டவிரோதமானது. இந்த பெண் விரோத ஆட்சியை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி ஸ்வாதி மாலிவால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

முன்னதாக, 6 மாதங்கள் வரை கர்ப்பமாக இருக்கும் பெண் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு வங்கியில் சேர அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் குறித்து  சு. வெங்கடேசன் எம்.பி ட்விட்டரில் ‘பெண்கள் 3 மாத கருவுற்ற காலத்தைக் கொண்டவர்களாக இருந்தால்அவர்கள் பணி நியமனத்துக்கு “தற்காலிகமாக தகுதி அற்றவர்கள்” என்கிறது ஸ்டேட் வங்கி. அரசியல் சாசனத்தின் பாலின சமத்துவத்துக்கு எதிரான அப்பட்டமான மீறல்.உத்தரவை உடனே திரும்பப் பெறுக’ என பதிவு செய்துள்ளார்.

author avatar
murugan