3 கோடி பயணிகளின் IRCTC தகவல்கள் கசிந்ததாக வெளியான தகவல்! இந்திய ரயில்வே மறுத்துள்ளது.!

3 கோடி பயணிகளின் தகவல் ஆன்லைனில் கசிந்ததாக வெளிவந்த தகவலை இந்திய ரயில்வே மறுத்துள்ளது.

இந்திய ரயில்வேயின் டேட்டா பேசில் ஹேக்கிங் நடைபெற்று, அதிலிருந்து 3 கோடி பயணிகளின் தகவல்களை ஹேக்கர் ஒருவர், ஆன்லைனில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளார் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நிழல் ஹேக்கர் எனும் பெயருடைய அந்த நபர், 3 கோடி பயணிகளின் பெயர்கள், இ-மெயில், முகவரி, மொபைல் எண், உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறினார். ஹேக்கர் வெளியிட்டுள்ள பதிவில், முக்கிய பிரபலங்கள், அரசு பணியாளர்கள் போன்றவர்களின் தகவல்கள் இருப்பதாக கூறினார்.

தற்போது இந்திய ரயில்வே, மூன்று கோடி பயணிகளின் தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் செய்திகளை மறுத்துள்ளது. ஹேக்கர் வெளியிட்ட மாதிரி தரவுகளின் பகுப்பாய்வில், IRCTC ஹிஸ்டரி உடன் மாதிரி டேட்டா  பொருந்தவில்லை என்பது கண்டறியப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment