இரண்டு நாள் பேய் வசூல்! காஞ்சனா-3 இரண்டு நாள் வசூல்!

பேய் படங்களை திகில் மற்றும் காமெடி கலந்து படமெடுத்து ஹிட் ஆக்குவதில் ராகவா லாரன்ஸ் கைதேர்ந்தவர். இவரது நடிப்பு இயக்கத்தில் முனி, காஞ்சனா பட வரிசைகளில் தற்போது வெளியாகி வெற்றி நடை போடுகிற படம் காஞ்சனா – 3! இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி பிரமாண்டமாக வெளியிட்டிருந்தது.

இந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ஆயிரகணக்கான தியேட்டர்களில் வெளியாகி வரவேற்பையும் பெற்று கொண்டு வருகிறது. இரண்டு நாளில் இப்பட வசூல் தமிழ் மற்றும் தெலுங்கு சேர்த்து, 53 கோடி (தோராயமாக) வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  படம் பி சி சென்டர் ஆடியன்ஸை திருப்தி படுத்துவதால், கோடை விடுமுறை என்பதாலும் இப்படம் பிரமாண்ட வசூலை கண்டிப்பாக ஈட்டும் என தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment