பப்ஜி தடையால் ஏற்பட்ட சோகம்.. 21 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

இந்தியாவில் பப்ஜி செயலி தடை செய்யப்பட்ட நிலையில், அதனை விளையாட முடியாமல் தவித்து வந்த 21 வயது இளைஞர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த ஜூன் மாதம் லடாக், கல்வான் எல்லையில் இந்தியா – சீன ராணுவத்திற்கிடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்தது.

இதன்காரணமாக, டிக் டாக், உட்பட 59 செயலிகளுக்கு மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்த நிலையில், பப்ஜி உட்பட மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதில் இளைஞர்கள் அதிகளவில் விளையாடும் கேம், பப்ஜி. இந்த பப்ஜி செயலியை 175 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து விளையாடி வந்தனர். இந்த பப்ஜி செயலிக்கும் மத்திய மத்திய அரசு தடை விதித்து, அதனை கூகுள் பிளே ஸ்டார் மற்றும் ios ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பலரும் படம் பார்ப்பது, கேம் விளையாடுவது, போன்றவற்றில் தங்களின் நேரத்தை செலவிட்டு வந்தனர். அதில் குறிப்பாக, பப்ஜி விளையாட்டை இளைஞர்கள் பலரும் விளையாண்டு வந்தனர். மேலும், ஏராளமானோர் பப்ஜி விளையாட்டில் தங்களை அடிமையாக்கிக் கொண்டனர்.

இந்தநிலையில் பப்ஜி விளையாட்டை விளையாடும் பலர், மனஅழுத்தம் தாங்காமழும், அதிகளவில் பணத்தை செலவு செய்தல், போன்ற காரணங்களுக்காக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தவகையில், இந்தியாவில் பப்ஜி செயலிக்கு தடை விதித்த நிலையில், அதனை விளையாட முடியாமல் தவித்து வந்த மேற்குவங்கத்தை சேர்ந்த 21 வயது இளைஞர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மேற்குவங்கம், நாடியா பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர், ப்ரீதம். இவர் சில தினங்களாக தொடர்ச்சியாக பப்ஜி விளையாட்டை விளையாண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மத்திய அரசு, பப்ஜி உட்பட 118 செயலிகளுக்கு தடை விதித்த நிலையில், பப்ஜி கேமை விளையாட முடியாமல் தவித்து வந்தார்.

இதன்காரணமாக ப்ரீதம், தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவர் மரணத்திற்கு பப்ஜி தடை செய்ததே காரணம் என பெற்றோர்கள் கூறி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அம்மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.