2023 நிதிநிலை அறிக்கை-ஒன்றிய அரசால் மொட்டையடிக்கப்பட்ட துறைகள்- பீட்டர் அல்போன்ஸ்

2023 நிதிநிலை அறிக்கை-ஒன்றிய அரசால் மொட்டையடிக்கப்பட்ட(hair cut) துறைகள் என பட்ஜெட் குறித்து பீட்டர் அல்போன்ஸ் ட்வீட்.

நாடாளுமன்றத்தில் நேற்று 2023-24 க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 7 முக்கிய அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டு இருந்தது.

nirmala2023

இந்த பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த  பதிவில், 2023 நிதிநிலை அறிக்கை-ஒன்றிய அரசால் மொட்டையடிக்கப்பட்ட(hair cut)துறைகள்: 1)கிராம்ப்புற வேலைவாய்ப்பு திட்டம். 2)உணவு பாதுகாப்பு திட்டம் 3)உணவு மானியம் 4)கல்வி 5)சுகாதாரம் 6)மதுரை எய்ம்ஸ்க்கு பட்டை நாம்ம் 7)தமிழ்நாட்டுக்கு பெரிய முட்டை 8) சிறுபான்மையிருக்கு வாயால் சுட்ட வடை!’ என  பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment