ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை -ஆளுநர் அறிவிப்பு ..!

ஹரியானா மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் திறக்கப்படும் என்று ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா அறிவித்தார்.

ஹரியானாவின் பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா உரையுடன் நேற்று தொடங்கியது. ஹரியானா சட்டப்பேரவையில் கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா தனது உரையை வாசித்தார். முதலில் தியாகிகளுக்கும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும்  அஞ்சலி செலுத்தினர். பட்ஜெட் கூட்டத் தொடருக்கு அனைவரையும் கவர்னர் வரவேற்றார்.  ஆளுநர் தனது உரையில் ராமர் கோயில் குறித்து குறிப்பிட்டார். பிரம்மாண்டமான ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டதன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது என்றார்.

சுகாதார அமைப்பின் உதவியுடன் கொரோனா போன்ற நோயைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளோம் என தெரிவித்தார். மேலும், ஹரியானா மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் திறக்கப்படும் என்று அறிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க மாநில அரசு முன்மொழிந்துள்ளது. பிவானி, ஜிந்த், மகேந்திரகர், கைதால், சிர்சா மற்றும் யமுனாநகர் மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதாக ஆளுநர் தத்தாத்ரேயா தெரிவித்தார்.

author avatar
murugan