” 20 பெண் , 20 ஆண் ” போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்…அசத்திய நாம் தமிழர் கட்சி…!!

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 21 சட்ட பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் மும்மரமாக இறங்கியுள்ளனர்.கூட்டணி குறித்து ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் முடிவு செய்து விட்டனர்.அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டுமே பாக்கியாக உள்ளது.

இந்நிலையில் மக்களவை , சட்டபேரவை என இரண்டு தேர்தலும் எப்போது வந்தாலும் தனித்து தான் போட்டியிடுவோம் என்று தொடர்ந்து தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றது நாம் தமிழர் கட்சி. அந்த கட்சி சார்பில் மக்களவை தேர்தலுக்கும் , 21 தொகுதி சட்ட பேரவை தேர்தலுக்கு ஆண் , பெண் சரி பாதியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி பாராளுமன்ற தேர்தலுக்கான 40 தொகுதிகளில் 20 பெண் , 20 ஆண் வேட்பாளர்களும் , 21 சட்ட பேரவை தேர்தலில் 11 ஆண் , 10 பெண் வேட்பாளர்களும் என்ற முடிவை அமுலாக்கும் வகையில் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment