தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு – டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீட்டை வழங்க  டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

2020 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவையே பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில், ஜனவரி 2020-ல் குரூப் 1 தேர்வுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மீண்டும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என அரசு தரப்பில் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஆங்கில வழியில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்யலாமா? என கேள்வி நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சில பல்கலைகழகங்களில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை முறைகேடாக பெற்று வேலைக்கு சேர்கின்றனர் அது குறித்து தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்