இன்று முதல் பொள்ளாச்சியில் 2 வாரங்களுக்கு நேரக் கட்டுப்பாடு.!

பொள்ளாச்சியில் இன்று முதல் 2 வாரங்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழக அரசு வருகின்ற 31-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளது.மேலும், அனைத்து  ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களில் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதனை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இன்று முதல் 2 வாரங்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே மளிகை கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், உணவகங்களில் இரவு 8 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

 

author avatar
murugan