தமிழகத்தில் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்க வாய்ப்பு- தமிழக அரசு

தமிழகத்தில் 2 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரும் வழக்கு இன்று காலை தொடங்கிய நிலையில்,  அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இந்நிலையில், அவர் ஆஜராகிய நிலையில், விசாரணை மீண்டும் தொடங்கியது. இந்த விசாரணையின் பொது தமிழகத்தில் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நிபுணர்களின் கருத்துப்படி, தமிழகத்தில் வரும் நாள்களில் கொரோனா தொற்று அதிகமாகும் வாய்ப்பு இருப்பதால், 2 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. மேலும், அக்டோபர்-நவம்பரில் கொரோனா தாக்கம் அதிகமடையும் எனவும் தெரிவித்தனர். இந்நிலையில், தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்த இதுவே சரியான தருணம் என தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதம்.