ஹஜ் யாத்திரை செல்ல 2 தவணை தடுப்பூசி அவசியம்..!

ஹஜ் புனித பயணத்துக்காக சவுதி அரேபியா செல்பவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் புனித பயணத்துக்காக சவுதி அரேபியா செல்பவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். தடுப்பூசி கட்டாயம் என்று சவுதி சுகாதார அமைச்சர் தெரிவித்ததால், ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி 2 தவணை தடுப்பூசி அவசியம் என அறிவித்தார்.

இந்தியாவிலிருந்து ஜூன் மாதத்தில் ஹஜ் புனித யாத்திரைக்கான விமானங்கள் இயக்கப்படும். ஹஜ் புனிதப் பயணம் செல்ல விண்ணப்பித்தவர்கள் இப்பொழுதே  தடுப்பூசி போட்டுக்கொள்ள இந்திய ஹஜ் கமிட்டி அறிவுறுத்தல். இப்பொழுதே முதல் தவணை தடுப்பூசி போட்டால் தான் ஹஜ் பயணத்திற்கு முன் இரண்டாம் தவணை போட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan