2 நாட்களில் வடகிழக்கு பருவமழை 12 சதவீதம் அதிகமாகும்…வானிலை எச்சரிக்கை..!!

தென்மேற்கு பருவமழை நாளையுடன் முடிவடைவதையடுத்து, 2 நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்திய தீபகற்பமானது தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என இரு பருவகாலங்களைக் கொண்டது. இந்த சமயத்தில் தான் நல்ல மழை பெய்யும். இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்வாரத் தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடர்ந்து வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்தது. செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலம் உள்ளது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதமும் நீடித்தது. வடமாநிலங்களில் படிப்படியாக வாபஸ் பெற்றது. அக். 20ஆம் தேதியுடன் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரி ஸ்டெல்லா கூறியதாவது:தற்போது வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைபெய்து வருகிறது. அக். 20ஆம் தேதியுடன் தென்மேற்கு பருவமழை விடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 2 நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 12 சதவீதம் அதிகம் பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
DINASUVADU

author avatar
Dinasuvadu desk

Leave a Comment