இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் மரணம்.!

இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் தகவல்.

இந்திய நிறுவனம் தயாரித்த “DOC-1 MAX” என்ற இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் தகவல் தெரிவித்துள்ளது.  நொய்டாவின் மரியோன் பயோடெக் நிறுவனம் இந்த இருமல் மருந்தை தயாரித்து வருகிறது. மருந்தில் இருந்த எத்திலீன் கிளைகோல் என்ற வேதிப்பொருள், உயிரிழப்புக்கு காரணம் என ஆய்வில் தெரிவந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே, டாக்-1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தின் பக்கவிளைவுகளால் நாட்டில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்த இருமல் மருந்து இந்தியாவில் விற்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment