157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் – நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு. 

நாடாளுமன்றத்தில் இன்று  2023-24 க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். மத்திய பட்ஜெட் 7 முக்கிய அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நியமளா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில், நாடு முழுவதும் புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏகலைவா பள்ளிக்கூடம் அதிக அளவில் பிரபலப்படுத்தப்படும். 38,800 ஆசிரியர்கள் புதிதாக பணியில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment