இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு..!

குருபூஜை தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 31ம் தேதி வரை  144 தடை உத்தரவு.

இந்திய விடுதலை போராட்டத்தில், ஆங்கிலேயருக்கு எதிராக  போரிட்டதில், மருது சகோதரர்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். இவர்களுக்கு சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் பகுதியில் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரும் 27-ஆம் தேதி குருபூஜை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.செந்தில்குமார் காளையார்கோவிலில் நடக்கும் குருபூஜை தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 31ம் தேதி வரை  144 தடை உத்தரவு பிறப்பித்து, உத்தரவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment