சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !ஈராக் -ஈரானில் பலி எண்ணிக்கை 140க்கு மேல் உயர்வு …


Image result for நிலநடுக்கம் ஈராக்

ஈராக் -ஈரான்  நாடுகளின் எல்லைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் உணரப்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவாகி உள்ளது.ஈராகின் ஹலாபஜி நகருக்கு வெளியே 32 கிலோமீட்டர் கடல் தொலைவில் மையப்புள்ளியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பெரும் சேதம் ஏற்படலாம் என்பதை எச்சரிக்கும் ஆரஞ்சு வண்ணம் அந்நாட்டில் காட்டப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 140 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் அளித்துள்ளனர்.

Image result for நிலநடுக்கம் ஈராக்

 மேலும் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். எல்லைப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், பல உயிரிழப்புகள் ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான்-ஈராக் நாடுகளில் உள்ள 8 கிராமங்கள் அதிமாக சேதமடைந்துள்ளதாகவும், அங்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சர்பால்-இ ஜஹாப் நகரில் இருப்பதால், மீட்பு குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *