14 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அதே சம்பவம் மீண்டும் மும்பையில்! பதறும் மக்கள்!

தென்மேற்கு பருவகாற்று வீசுவதன் காரணமாக மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. 48 மணிநேரத்திற்கு இந்த மழை தொடர்ந்ததால்,  மும்பையை சுற்றியுள்ள சீயோன், மாதுங்கா, மாஹிம், அந்தேரி,  மாலட்,  தாஹிசார்  ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது.

இதேபோல  ஜூலை 26ஆம் தேதி, 14 ஆண்டுகளுக்கு முன்னர், இப்படி தான் கனமழை வெளுத்து வாங்கியதாம். அந்த சமயத்தில்,  மக்கள் வீட்டை விட்டு வெளியே கூட செல்ல முடியாத நிலை இருந்ததாம். தற்போது அதே நாளில் மீண்டும் அதே போல் கனமழை பெய்து வருவதால், அதே நிலைமை வந்துவிடுமோ என மக்கள் பதறி போய் உள்ளனர்.

இன்னும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்  மூலம் தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,  மும்பைக்கு வர இருந்த 17 விமானங்கள் திருப்பி வேறு இடங்களில் தரை இறக்கப்பட்டுள்ளன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.