தமிழகத்தில் 12 ஐபிஎஸ். அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள்  மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள்  :

1. தேவகோட்டை சப்-டிவிஷன் ஏஎஸ்பி இருந்து வந்த கிருஷ்ணராஜ் எஸ்.பி.யாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு , சென்னை போக்குவரத்து காவல் (வடக்கு) துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2. சென்னை போக்குவரத்து காவல் (வடக்கு) துணை ஆணையராக இருந்த ராஜசேகரன், சென்னை காவல் ஆணையரக தலைமையிடத்தின் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3. சென்னை காவல் ஆணையரகத் தலைமையிடத்தின் துணை ஆணையராக இருந்த விமலா, சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப்பிரிவு-1 துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

4 .சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப்பிரிவு-1 துணை ஆணையராக இருந்த திருநாவுக்கரசு, டிஜிபி அலுவலக சட்டம் ஒழுங்கு ஏஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

5. டிஜிபி அலுவலக சட்டம் ஒழுங்கு ஏஐஜி -யாக இருந்த சாம்சன், உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

6. உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக இருந்த சுந்தரவடிவேல், திருப்பூர் காவல் ஆணையரக தலைமையிடத் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

7. டிஜிபி அலுவலக உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு ஏஐஜி-யாக இருந்த ஸ்ரீதர்பாபு, சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப்பிரிவு-1 துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

8. சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப்பிரிவு-1 துணை ஆணையராக இருந்த சுதாகர், டிஜிபி அலுவலக உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்புப் பிரிவு ஏஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

9. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார் காத்திருப்போர் பட்டியலில் இருந்த நிலையில் , தானியங்கி மற்றும் கணினிமயமாக்கல் பிரிவு, சென்னை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

10. தானியங்கி மற்றும் கணினிமயமாக்கல் பிரிவு சென்னை, எஸ்.பி.யாக இருந்த முத்தரசி, சிபிசிஐடி-2 எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்..

11. சென்னை ரயில்வே எஸ்.பி.யாக மாற்றப்பட்ட வேலூர் எஸ்.பி. பிரவேஷ் குமார் தர்மபுரி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

12. தர்மபுரி எஸ்.பி. ராஜன், சென்னை ரயில்வே எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

.