11 மற்றும் 12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது அரசுத் தேர்வுகள் இயக்ககம்.

ஜூன் 19-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, 19, 20, 21, 22, 23 ,24, 25, 26 ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை 12-ஆம் வகுப்பு துணை தேர்வு நடைபெற உள்ளது.

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், துணைத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்று, ஜூன் 27 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை 11-ஆம் வகுப்பு துணை நடைபெறும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அதன்படி, 27, 28, 30, 1, 3, 4, 5 ஆகிய தினங்களில்  காலை 10 மணி முதல் மத்திய 1.15 மணி வரை 11ம் வகுப்பு துணை தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்