கொரோனாவிலிருந்து கடந்த ஒரே நாளில் 11,961 பேர் குணமடைவு;இதுவரை 109.63 கோடி பேருக்கு தடுப்பூசி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,466 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 460  ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,88,579 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 11,466 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 1300 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,43,88,579 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 460 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,61,849 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 11,961 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை  3,37,87,047 ஆக உயர்ந்துள்ளது.குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.25% ஆக அதிகரிப்பு.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,39,683 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.264 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 1,09,63,59,208 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 52,69,137 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.