விண்டோஸ் 10 அளித்துள்ள புதிய வசதிகள்..!

விண்டோஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமான ‘விண்டோஸ் 10, தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய சலுகைகளை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மேலும் சில வசதிகளை செய்துள்ளது. இதமூலம் விண்டோஸ் 10 ஓஎஸ் உள்ள கம்ப்யூட்டர்களில் டெக்ஸ்டாப் பேக்ரவுண்ட், கலர், சவுண்ட் மற்றும் லாக் ஸ்க்ரீனை நாம் புதியதாக விருப்பப்படி செட்டப் செய்து கொள்ளலாம்.

உங்கள் பிடித்த  தீம்ஸ்களை கம்ப்யூட்டரின் டெக்ஸ்டாப்பில் வைத்து கொள்ளும் வழிமுறைகள்:

முதலில் Start menu -> Settings -> Personalization, அதன் பின்னர் click Themes என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
இதில் உள்ள கூடுதல் தீம்ஸ் என்ற பிரிவை கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் மைக்ரோசாப்ட் அக்கவுண்டில் லாக் இன் செய்திருந்தால்தான் இந்த ஸ்டோருக்குள் சென்று தேவையான தீம்ஸ்களை டவுன்லோடு செய்ய முடியும்.
இந்த பக்கத்தில் உள்ள பல தீம்களில் ஒன்றை நீங்கள் செலக்ட் செய்ய வேண்டும்.பின்னர்  செலக்ட் செய்த தீம்ஸ் ஐகான் மீது கிளிக் செய்ய வேண்டும்.
கிளிக் செய்தவுடன் அது டவுன்லோடு ஆகும். டவுன்லோடு முடிந்தவுடன் லான்ச் என்பதை கிளிக் செய்தால் உங்கள் டெக்ஸ்டாப்பில் நீங்கள் தேர்வு செய்த தீம் வந்துவிடும்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment