வெள்ள அபாய எச்சரிக்கை.! செம்பரம்பாக்கம் ஏரியில் 3 மணிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு.!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரின் அளவு 500 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக இன்று மாலை 3 மணி முதல் திறக்கப்பட உள்ளது. 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதிலும், குறிப்பாக சென்னை சுற்றியுள்ள மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1510 கனஅடி நீர் வந்துகொண்டு இருக்கிறது. ஏற்கனவே 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வரும் வேளையில், மேலும் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால்,

இன்று மாலை 3 மணியில் இருந்து நீர் வெளியேறும் அளவு 500 கனஅடியில் இருந்து 1000  கனஅடியாக உயர்த்தப்பட உள்ளது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரையோர கிராமங்களுக்கு தற்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment