ஒரு ஆதாரில் 5 இணைப்புகள் இருந்தாலும் 100 யூனிட் இலவசம் உண்டு!

ஒருவர் 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் உண்டு என மின்சாரத்துறை தகவல்.

தமிழகத்தில் 2.33 கோடி பேரில் இதுவரை 15 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஒருவர் அதாவது ஒரு ஆதாரில் 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் மின் இணைப்புடன் ஆதார் இணைத்த பிறகு எந்த மாற்றமும் செய்யப்படாது எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

இலவசம் மின்சாரம் பெறும் விவசாயிகள் உள்ளிட்டோரும் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். இலவச மின்சாரம் பெறும் குடிசைவாழ் மக்களும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். நஷ்டத்தில் இயங்கும் மின் வாரியத்தை சீரமைக்கவே ஆதார் எண் இணைக்கப்படுகிறது என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இதனிடையே, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. பண்டிகை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம் நடத்தப்படும். மின் கட்டணம் செலுத்தும் மின் அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறும். இதற்கு ஆதார் மற்றும் மின் இணைப்பு எண் மட்டும் கொண்டு சென்றாலே போதும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment