கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் நிதி – ஆந்திர முதல்வர்!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தினமும் புதிதாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், ஆந்திராவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதுவரை ஆந்திராவில் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 11 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

2 லட்சத்து 10 ஆயிரம் பேர் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், 9 ஆயிரத்து 200 க்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே ஆந்திராவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் இறுதி சடங்குக்காக 15 ஆயிரம் ரூபாய் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் எனவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் உத்தரவை வெளியிட்டுள்ளார்.

author avatar
Rebekal