#BREAKING: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து..!

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய அரசு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 25-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். சட்டமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அரசியல் லாபத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டதாக மனுவில் புகார் தெரிவித்தனர்.

முறையான சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற என மனுவில் தெரிவித்து இருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்ற மதுரை கிளை வன்னியர் சமூகத்தினருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு வழங்கிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர்  தீர்ப்பளித்துள்ளனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5  சதவீத இட ஒதுக்கீடு தந்தது செல்லாதது. அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை எனக்கூறி நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பு வழங்கினர். இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா..? சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா..? முறையான கணக்கெடுப்பு விவரங்கள் இல்லாமல் இட ஒதுக்கீடு தர முடியுமா..? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

author avatar
murugan