1.5 கோடி முகக்கவசங்கள் , 30,000 டெஸ்ட் கிட் வாங்க அரசு நடவடிக்கை -முதலமைச்சர்.!

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி  மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்களுடன் ஆலோசனை  நடத்திய பின்னர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது ,வெளியில் இருந்து 1.5 கோடி முகக்கவசங்களும் , N95  முகக்கவசங்கள் 25 லட்சமும் , அதேபோல பாதுகாப்பு கவசம் 11 லட்சம் வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மேலும்  வெண்டிலேட்டர் புதியதாக 2500  வாங்கவும் , டெஸ்ட் கிட் 30,000 வாங்கவும்  அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதைத்தொடர்ந்து இன்று பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த 11 குழுக்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிற்கு ஒவ்வொரு வேலையை வரையறு செய்து கொடுத்துள்ளோம்.அந்த பணியை அந்த துறையை சார்ந்த அதிகாரிகள் செயல்படுத்தி வருகிறார்கள்.

இதன் காரணமாக கொரோனா நோய் தடுப்பு பணி வேகமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளன.தமிழகத்தில் 14 ஆய்வு கூடங்கள் உள்ளன.மத்திய அரசிடம் மேலும் 3 ஆய்வு கூடங்கள் செய்யப்பட மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்.அந்த அனுமதி விரைவில் வந்துவிடும் அது வந்தால் தமிழகத்தில் 17 ஆய்வு கூடங்களாக மாறிவிடும் என கூறினார்.

 

 

 

author avatar
murugan