விருத்தாசலத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டமா? கொந்தளிக்கும் கிராம மக்கள்..!

 

விருத்தாசலம் அருகே காவனூர், மருங்கூர் ஆகிய கிராமங்களில் உள்ள ஏரியில் 40 ஆடி ஆழம், 10 அடி அகலத்துக்குக் கிணறு அமைக்கும்  பணிகள் கடந்த சில நாள்களாக நடந்து வருகிறது. இன்று காலையில் விவசாயச் சங்கத் தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அப்பகுதிக்குச் சென்று அங்கு பணியில் இருந்தவர்களிடம் கேட்டதற்கு பொதுப் பணிக்குச் சொந்தமான ஏரிகளில் மழை நீர் சேகரிப்பிற்காக இதனைக் கட்டுவதாக தெரிவித்தனர். ஆனால், கிராம மக்கள் மழை நீர் சேகரிக்க இப்படி அமைக்க அவசியமில்லை.

Image result for விருத்தாசலம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டம்

இது, மீத்தேன் போன்ற திட்டத்துக்காகத்தான் அமைக்கப்படுகிறது. அதனால் பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கூறி பணியைத் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து சிறிது நேரம் கண்டன ஆர்பாட்டம் செய்தனர். அதன்பின்பு பணிகள் நடைப்பெற அனுமதிக்க மாட்டோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து விளக்கமளித்தால் மட்டுமே பணிகள் செய்ய வேண்டும் எனக் கூறி பணிகளைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பொது மக்களை அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்யலாம் எனக் கூறி சமாதானப்படுத்தியுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment