இந்தியாவிற்கு முதலிடம்.! எதில் தெரியுமா?

 

ரஷ்யாவிடம் இருந்து,கடந்த 2017 ஆம் ஆண்டு வரையிலாக அதன் மிக சக்தி வாய்ந்த, அதிநவீன ஆயுதங்களை, அதிக அளவில் வாங்கிய 10 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவிற்கு கிடைத்துள்ள இடம் எது தெரியுமா?

ஏஎப்பி அறிக்கையின்படி, கடந்த 2017 வரையிலாக உலகம் முழுவதிலும், மொத்தம் 53 நாடுகளுக்கு, சுமார் 15 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை ரஷ்யா ஏற்றுமதி செய்துள்ளது. அந்த 15 பில்லியன் டாலர்களில், என்னென்ன நாடுகளுக்கு என்னென்ன இடம்.?

10-வது இடத்தில் வங்காளதேசம்.!

ஆயுதங்கள் வாங்கிய மொத்த தொகை: 93 மில்லியன் டாலர்கள். சில பெரிய கொள்முதல் : ஆறு மி-8எம்டி / மி-17 டிரான்ஸ்போர்ட் ஹெலிகாப்டர்கள், இதே வகையில் கூடுதலாக மேலும் ஐந்து ஹெலிகாப்டர்களையும் ஆர்டர் செய்துள்ளது. அவைகள் இன்னும் டெலிவரி செய்யப்படவில்லை. தவிர 340 ரஷ்ய பிடிஆர்-80 ஏபிசிக்களையும் வங்காளதேசம் வாங்கியுள்ளது.

05-வது இடத்தில் வியட்நாம்.!

ஆயுதங்கள் வாங்கிய மொத்த தொகை: 461 மில்லியன் டாலர்கள். சில முக்கிய கொள்முதல்: ஆறு ரஷியன் கிலோ கிளாஸ் டைப் 636 நீர்மூழ்கிக் கப்பல்கள், 64 ரஷ்ய டி-90எஸ் டாங்கிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது, அவைகள் இன்னும் வழங்கப்படவில்லை.

04-வது இடத்தில் அல்ஜீரியா.!

ஆயுதங்கள் வாங்கிய மொத்த தொகை: 795 மில்லியன் டாலர்கள். சில முக்கிய கொள்முதல்: 42 ரஷியன் மி-28என் போர் ஹெலிகாப்டர்கள், அதில் 30 ஹெலிகாப்டர்கள், 2016 மற்றும் 2017-க்கு இடையில் வழங்கப்பட்டது. மேலும் 8 மி-26 போக்குவரத்து ஹெலிகாப்டர்களை வாங்கியுள்ளது. மேலும் இரண்டு ரஷ்ய கிலோ கிளாஸ் டைப் 636 நீர்மூழ்கிக் கப்பல்கள்களை ஆர்டர் செய்துள்ளது. அது 2018 ஆம் ஆண்டில் டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

03-வது இடத்தில் சீனா.!

ஆயுதங்கள் வாங்கிய மொத்த தொகை: 859 மில்லியன் டாலர்கள். சில முக்கிய கொள்முதல்: 24 ரஷ்ய சு-35 போர் விமானங்கள், அதில் 14 விமானங்கள் 2016 மற்றும் 2017 ஆகியவைகளுக்கு இடையில் வழங்கப்பட்டுள்ளது. தவிர சுமார் 3 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆறு ரஷ்ய எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை ஆர்டர் செய்துள்ளது. அவைகள் அடுத்த 2018-ல் டெலிவரி செய்யப்படலாம். அதில் ஒன்று 2018-ன் ஜனவரி மாதம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

02-வது இடத்தில் எகிப்து.!

ஆயுதங்கள் வாங்கிய மொத்த தொகை: 1.111 பில்லியன் டாலர்கள். சில முக்கிய கொள்முதல்: 46 கா-52 போர் ஹெலிகாப்டர்கள் மற்றும் 50 மிஜி -29எம் போர் விமானங்கள், உடன் கடந்த 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில், ஏராளமான சாம்ஸ் ஏவுகணைகள் மற்றும் போர் ஹெலிகாப்டர்களுக்கான பல்வேறு வகையான ஏவுகணைகளையும் எகிப்து வாங்கியுள்ளது, அதில் பலவும் 2017-ல் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

01-வது இடத்தில் இந்தியா.!

ஆயுதங்கள் வாங்கிய மொத்த தொகை: 1.893 பில்லியன் டாலர்கள். சில முக்கிய கொள்முதல் : கடந்த 2012 ஆம் ஆண்டில், 42 ரஷ்யன் சு-30எம்கே பைட்டர் ஜெட் விமானங்களை, சுமார் 1.6 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியது. இதில் 25 சதவீதம் 2016-2017-ல் வழங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் இரண்டு ரஷ்ய ஏ50-எஹெல் வாங்கியுள்ளதுடன், மிக் -29எஸ்எம்டிகளையும், உடன் சில லைட் மாற்று ட்ரான்ஸ்போர்ட் ஹெலிகாப்டர்களையும் வாங்கியுள்ளது.

இந்தியா கடந்த சில ஆண்டுகளில் சுமார் 1,000 டி-90 டாங்கிகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியுள்ளது. அதில் 220 டாங்கிகள் டெலிவரியை சந்தித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் 5 பில்லியன் டாலர் மதிப்பில், ஐந்து ரஷ்ய எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்க முடிவு செய்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment