வரலாற்றில் இன்று ..???

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தினம் இன்று உலக அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்திய அளவில் தமிழகத்தில்தான் தற்கொலை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தற்கொலை எண்ணங்களை தடுப்பதற்கான தீர்வு குறித்து டாக்டர் விளக்கம் அளித்தார்.

Image result for உலக தற்கொலை தடுப்பு தினம்

சர்வதேச தற்கொலை தடுப்பு சங்கம் (IASP) மற்றும் உலக சுகாதார மையம் (WHO) ஆகியவற்றின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 2003 முதல் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் அதிகரிக்கும் தற்கொலை எண்ணங்களை தடுக்க இந்த நாளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.உலக அளவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். நாள்தோறும் சராசரியாக 3 ஆயிரம் பேர் செய்கின்றனர்.  இந்தியாவில் ஆண்டுதோறும் 1 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். அதாவது உலக அளவில் உள்ள நாடுகளில் 8 பேர் தற்கொலை செய்துகொண்டால் அதில் ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்பவராக உள்ளார்.

Image result for உலக தற்கொலை தடுப்பு தினம்

அதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2012 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் ஆண்டுக்கு 15 ஆயிரம் பேர் தற்கொலை செய்கின்றனர். தினமும் 20க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்திய அளவில் தற்கொலை செய்பவர்கள் எண்ணிக்கையில் முறையே தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்கள் முதல் 3 இடங்களில் உள்ளன. பெரும்பாலான தற்ெகாலைகள் குடும்ப பிரச்னைகள், கடன் சுமை, நோய், தோல்விகள், உறவு முறிவு, மது போதைக்கு அடிமையாவது  போன்ற காரணங்களால் நடக்கின்றன.

Image result for உலக தற்கொலை தடுப்பு தினம்

மன அழுத்தம் அதிகம் இருப்பவர்களுக்கு தற்கொலைக்கான வாய்ப்பு அதிகம். ஒருவருக்கு தற்கொலை எண்ணம் இருந்தால் உடனடியாக அவருக்கு தகுந்த டாக்டர்களால் மருத்துவ ஆலோசனை (மெடிக்கல் கவுன்சலிங்) வழங்க வேண்டியது அவசியம்.நமக்கு நெருங்கிய நபர்கள் அதுபோன்ற எண்ணங்களில் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் அவரை பக்குவமாக பேசி அழைத்து வந்து கவுன்சலிங் கொடுக்க வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப கனநேரத்தில் எடுக்கும் முடிவு தற்கொலையில் முடிகிறது.

Image result for உலக தற்கொலை தடுப்பு தினம்

உணர்ச்சிவசப்பட்டு இருக்கும் போது எடுக்கப்படும் எந்த முடிவும் தவறாகவே இருக்கும். இதனால் தற்கொலை முயற்சி தொடர்பான இந்திய தண்டனை சட்டப்பிரிவு 309 விலக்கப்பட்டுள்ளது.எனவே தற்கொலை தண்டனைக்குரிய குற்றமாகும். பதற்றம், மன அழுத்தம், மனஉளைச்சல் போன்ற நிலையில் இருப்பவர்கள் தயக்கமின்றி மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது என்றார்.

author avatar
kavitha

Leave a Comment