வரலாற்றில் இன்று ஏப்ரல் 26-அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்!

ஏப்ரல் 26 கிரிகோரியன் ஆண்டின் 116 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 117 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 249 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1802 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினான்.
1805 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் லிபியாவின் டேர்ன் நகரைக் கைப்பற்றினர்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோசப் ஜோன்ஸ்டன் தலைமையில் கூட்டமைப்புப் படையினர் வட கரோலினாவின் டேர்ஹம் நகரில் கூட்டணியினரிடம் சரணடைந்தனர்.
1865 – அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்த ஜோன் பூத் என்பவனை கூட்டணிப் படைகள் சுட்டுக் கொன்றனர்.
1937 – ஸ்பானிய உள்நாட்டுப் போர்: ஸ்பெயினின் கேர்னிக்கா நகரம் ஜெர்மனியினரின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
1945 – இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியின் கடைசி வெற்றிகரமான தாக்குதல் போட்சன் என்ற இடத்தில் இடம்பெற்றது.
1954 – பிரெஞ்சு இந்தோசீனா, மற்றும் வியட்நாமில்வில் அமைதியைக் கொண்டுவரும் முகாமாக ஜெனீவாவில் அமைதிப்பேச்சுக்கள் ஆரம்பமாயின.
1962 – நாசாவின் ரேஞ்சர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது.
1964 – தங்கனீக்கா, சன்சிபார் இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு தான்சானியா என ஒரு நாடாகியது.
1981 – மட்டக்களப்பில் பட்டித்திடலில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1982 – தென் கொரியாவில் முன்னாள் காவல்துறையினன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் 57 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1986 – உக்ரைனில் செர்னோபில் அணுமின் உலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.
1994 – ஜப்பானில் சீன விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 264 பேர் கொல்லப்பட்டனர்.

1994 – உச்சி குவார்க் (Top Quark) உபஅணுத் துணிக்கை ஓன்றைத் தாம் அவதானித்ததாக இயற்பியலாளர்கள் அறிவித்தனர்.
2005 – 29-ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் சிரியா தனது 14,000 இராணுவத்தினரை லெபனானில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.

பிறப்புகள்

1564 – வில்லியம் சேக்சுபியர், ஆங்கில எழுத்தாளர் (இ. 1616)Image result for வில்லியம் சேக்சுபியர்
1762 – சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1827)Image result for சியாமா சாஸ்திரிகள்
1906 – ஜி. பட்டு ஐயர், திரைப்பட நடிகர், இயக்குனர்Related image
1970 – சரண்யா, திரைப்பட நடிகை.Image result for சரண்யா

இறப்புகள்

1920 – சிறீனிவாச இராமானுசன், கணித மேதை (பி. 1887)Image result for சிறீனிவாச இராமானுசன்
1897 – பெ. சுந்தரம் பிள்ளை, மனோன்மணீயம் என்ற நாடக நூலைப் படைத்த தமிழறிஞர் (பி. 1855)Image result for பெ. சுந்தரம் பிள்ளை
1977 – எஸ். ஜே. வி. செல்வநாயகம், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் (பி. 1898)Related image

சிறப்பு நாள்

தான்சானியா – தேசிய நாள்
அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment