ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தம்..!

இந்திய ராணுவத்துக்காக கமோவ் (kamov)ரக ஹெலிகாப்டர்களை ரஷ்யாவுடன் இணைந்து தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அக்டோபருக்குள் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி ரஷ்யா சென்ற போது காமோவ் Ka – 226T ரக ஹெலிகாப்டர்களை இணைந்து தயாரிக்கும்  திட்டத்திற்கு பரஸ்பரம் இருநாடுகளும் சம்மதம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

தற்போது இந்த ஹெலிகாப்டர்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ரஷ்யன் ஹெலிகாப்டர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து, தயாரிப்பு குறித்த முழு விவரங்களை தாக்கல் செய்த பின்னர், அக்டோபருக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment