யானைகள் புத்துணர்ச்சி முகாமை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது – பொதுமக்கள் பாராட்டு….!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட யானைகள் புத்துணர்ச்சி முகாமை, தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில் கோயில் யானைகளுக்கு கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான புத்துணர்வு முகாம் கோவையில் தொடங்கவுள்ளது. தேக்கம்பட்டி வனபத்ரகாளி அம்மன் கோவில் அருகே பொதுப்பணித் துறைக்கு சொந்தமான வனப்பகுதியில் புத்துணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 48 நாட்கள் நடக்கும் இந்த புத்துணர்வு முகாமில் பங்கேற்க, தமிழகத்தில் உள்ள அறநிலையத் துறைக்குட்பட்ட கோயில்களில் உள்ள யானைகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை, தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment