மௌனகுரு இயக்குனருடன் ‘மகாமுனி’யாகபோகும் ஆர்யா!

தமிழ் சினிமாவில் ஓரளவிற்கு வளர்ந்து வந்த நடிகர் ஆர்யா.  ஆனால் அவரா கடைசியாக நடித்த எந்த படமும்  அவருக்கு கைகொடுக்கவில்லை. அவரும் உடம்பை பயில்வான்போல ஏற்றி நடித்தாலும் கதைக்களம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. கடைசியாக வெளியான கஜினிகாந்த் ஓரளவிற்கு ரசிகர்களை ஈர்த்தது.

இந்நிலையில் இவர் தற்போது ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு மகாமுனி  என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. மற்ற நடிகர், நடிகை விபரம் பின்னர் அறிவிக்கப்படும்   என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : tamil.cinebar.in

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment