மெக்ஸிகோவில் எரிமலை வெளியேற்றும் புகை நிறம் மாறும் அதிசயம்…!

எரிமலை ஒன்று மெக்ஸிகோவில் நிறம் மாறுவது இயற்கை ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய மெக்ஸிகோவில் உள்ள மோரோலெஸ் ((Moroles)) மாகாணத்தில் உள்ள போபோகேட்டபட் ((Popocatepetl)) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த எரிமலை தற்போது புகையை வெளிவிட்டு வருகிறது. எரிமலையைக் கண்காணித்து வரும் குழுவினர் வீடியோ எடுத்த போது, முதலில் சாம்பல் நிறத்தில் புகையை வெளியேற்றிய எரிமலை, அடுத்த சில நிமிடங்களில் செந்நிறமாக மாறியது.

எரிமலையின் இந்தச் செயல்பாடு ஆராய்ச்சியாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எரிமலையில் இருந்து வெளியாகும் சில வாயுக்களால் இதுபோன்ற நிறமாற்றம் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment