பிரமாண்ட இயக்குனரை வம்பிழுத்த சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடித்திருக்கும் திரைப்படம் 2.O. இத்திரைப்படம் அடுத்த வாரம் வியாழனன்று திரைக்கு வர உள்ளது. அதற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

அதற்க்கு அடுத்த நாளில் தெலுங்கு சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா தயாரிப்பில் பைரவா கீதா எனும் திரைப்படம் ரிலீசாக போகிறது. இந்நிலையில் இன்று டிவிட்டரில் இவர் பதிவிட்டிருக்கையில், குழந்தைகள் பார்க்கும் படத்தை பெரியவரான ஷங்கர் இயக்கி உள்ளார். பெரியவர்கள் பார்க்கும் பைரவா கீதா படத்தை சிறியவராக சித்தார்த்தா இயக்கி உள்ளார் என கிண்டலாக பதிவிட்டுள்ளார். இது ஷங்கர் ரசிகர்களை வெகுவாக கோவப்படுத்தியுள்ளது.

source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment