நீதிபதி V. காலித் மரணம்… யார் இந்த நீதிபதி காலித் …

நீதிபதி காலித் , கேரளா கண்ணூரில் 1922 ல் பிறந்தவர், கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் 1982 -87 வரை இருந்தவர். மின்சார வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருண்டு கிடந்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். மின்வாரிய அதிகாரிகளுக்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும், தொழிலாளர்கள் வழக்கை நடத்துகிற வழக்கறிஞர்களும் நீதிபதி காலித் ஆணையத்தைப் பற்றித் தெரியும். நாடு முழுவதும் மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆணையம்தான் நீதிபதி காலித் ஆணையம்.
நீலகிரி மலைகளில் உள்ள குந்தா, எமரால்ட், அவலாஞ்சி, அப்பர்பவானி, பரளி, மசினகுடி, மாயர், சிங்காரா, பைக்காரா, வால்பாறையில் காடம்பாறை, சோலையாறு, ஆழியார், திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் போன்ற மலைத்தொடர்களில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள மின்வாரியங்களில் பணிபுரிந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் குறித்து ஆய்வு செய்து 11.12.1991 அன்று அறிக்கை அளித்தார். இவருடைய அறிக்கையின் அடிப்படையில்தான் 15000 க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டார்கள். இந்த அறிக்கையை பல வழக்குகளுக்கும் பயன்படுகிறது.
அத்தகைய நீதிபதி காலித் இன்று தனது 95 வது வயதில் இறந்துவிட்டார். அவரது அறிக்கையும் பணியும் பலநூறு ஆண்டுகள் வாழும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment