தேர்தல் நேரத்தில் புதிய திட்டங்கள் அறிவிக்க தடை : சத்யபிரத சாஹு

மக்களவை தேர்தல் நடைபெற்றுவருகிறநிலையில் தேர்தல் ஆணையம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அவர்கள் கூறுகையில், தூத்துக்குடி, மதுரை, கரூர், மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படை ஆய்வு தொடரும் என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தேர்தல் நடந்து முடிந்த 28 மாவட்டங்களில் பறக்கும் படை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் புதிய திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கக்கூடாது என்றும், ஆலோசனை கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment