தேனி மாவட்டத்தில் ஒட்டபட்ட போஸ்டரால் தல ரசிகர்கள் கைது!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.

இப்படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இப்பட ட்ரெய்லரில் அஜித் என் ஊரு தேனி மாவட்டம் என கூறியிருப்பார். இதனால் தேனி மாவட்ட ரசிகர்கள் குஷியாகி விஸ்வாசம் படத்தை கொண்டாட தேனி மாவட்டம் முழுவதும் அதிகமான போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.

அதில் சில போஸ்டர்களில் சாணி அடிக்கப்பட்டிருந்ததால் ரசிகர்கள் கோபமாகி அந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த வீடுகளின் உரிமையாளர்களிடம் சண்டைக்கு சென்றனர். இதனால் அந்த வீட்டு உரிமையாளர்கள் போலிஸில் புகார் செய்தனர். இதன் பேரில் நான்கு ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment