தூத்துக்குடியில் இலவச உடற்பயிற்சி நிலையம் திறப்பு பாடி பில்டர்கள் மகிழ்ச்சி..!

தூத்துக்குடி 2018 வெள்ளிக்கிழமை மே 18 ;தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் அனைவரும்  உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்த  மாவட்ட எஸ்பி மகேந்திரன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஏஎஸ்பி செல்வன் நாகரத்தினம், தென்பாகம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்  கணேஷ்குமார், அரி அன்கோ மேலாளர் அருண், ரமேஷ் பிளவர்ஸ் மேலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழா நிறைவில் எஸ்.பி மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 45 உடற்பயிற்சி கூடம்  திறக்கப்பட்டுள்ளது.  மாவட்டத்தில்  மிகப்பெரிய காவல் நிலையமான  தென்பாகம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு,குற்றப்பிரிவு, போக்குவரத்து, அனைத்து மகளிர் காவல் நிலையம் போன்றவற்றில் 150 காவலர்கள் பணிசெய்கிறார்கள். இவர்கள் உள்ளத்திலும் உடலிலும் வலுவாக இருக்க வேண்டும் அதற்க்காக   24 மணி நேரமும் இயங்கும் இந்த உடற்பயிற்சி கூடத்தில், காவலர்கள்  இளைஞர்கள்,ஆர்வலர்கள் போன்றோர் இந்த கூடத்தை பயன்படுத்தலாம்.  சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்” வெளியிலிருந்து வருபவர்கள் காவல் நிலையத்தில் ஒரு பதிவு செய்து பயன் பெறலாம். 50 வயதுக்கு உட்பட்ட காவலர்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும்.மற்ற 50 வயதுக்கு மேல் உள்ள காவலர்கள்  விருப்பம்போல் தங்களால் இயன்ற அளவிற்கு இங்கு பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். என்று கூறினார். இதில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்          மயிலேறும் பெருமாள்  உட்பட காவல் உதவி ஆய்வாளர்கள் ,காவலர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
ரமேஷ் பிளவ்வர்ஸ் ரூ 90,000,அரி அன்கோ ரூ 50,000 உதவியுடன் உடற்பயிற்சி கருவிகள் நிறுவப்பட்டு உள்ளன.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment