துனீசியாவில் IMFக்கு எதிரான‌ ம‌க்க‌ள் எழுச்சி போராட்டம்…!!

துனீசியாவில் IMFக்கு எதிரான‌ ம‌க்க‌ள் எழுச்சி. நாட் க‌ண‌க்காக‌ தொட‌ரும் ஆர்ப்பாட்ட‌ங்க‌ள். ப‌ல‌ ந‌க‌ர‌ங்க‌ளில் அர‌ச‌ அலுவ‌ல‌க‌ங்க‌ள் தாக்க‌ப் ப‌ட்ட‌ன‌. 200 பேர் கைது. ஆர்ப்பாட்ட‌க்கார‌ரை இட‌துசாரிக் க‌ட்சிக‌ள் தூண்டி விடுவ‌தாக‌ துனீசிய‌ அர‌சு குற்ற‌ம் சாட்டுகின்ற‌து.
துனீசியாவுக்கு க‌ட‌ன் வ‌ழ‌ங்கும் IMF அறிவுறுத்த‌ல் கார‌ண‌மாக, அத்தியாவ‌சிய‌ பொருட்க‌ளுக்கான‌‌ அர‌சு மானிய‌ம் குறைக்க‌ப் ப‌ட்ட‌து. வ‌ரி உய‌ர்த்த‌ப் ப‌ட்ட‌து. இத‌னால், ஜ‌ன‌வ‌ரி 1 தொட‌க்க‌ம் பொருட்க‌ளின் விலைக‌ள் அதிக‌ரித்துள்ள‌ன‌.

2011 ம் ஆண்டு கிள‌ர்ந்தெழுந்த‌தை விட‌, த‌ற்போதைய‌ எழுச்சியில் தான் ம‌க்க‌ள் மிக‌வும் கோபாவேத்துட‌ன் போரிடுகின்ற‌ன‌ர். ஏனென்றால் பொருளாதார‌ப் பிர‌ச்சினை அனைவ‌ரையும் பாதிக்கின்ற‌து. இத‌னால் வீதிக்கு வ‌ந்து போராடுவ‌தைத் த‌விர‌ ம‌க்க‌ளுக்கு வேறு வ‌ழி இல்லை.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment