தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் நாப்கின் இயந்திரம் வைக்கக்கோரிய வழக்கு! பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

தமிழகத்தில் உள்ள 5,588 பள்ளிகளில் மாணவிகளுக்கு நாப்கின் வழங்கவும் மற்றும் பயன்படுத்திய நாப்கினை எரிப்பதற்காக நாப்கின் மறுசுழற்சி இயந்திரம் வைக்கவும் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை சத்யநாராயணன் மற்றும் புகழேந்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் நாப்கின் வழங்கப்படுவதாகவும் மேலும் 3,200 பள்ளிகளில் நாப்கின் எரிக்க இயந்திரம் வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும்,மீதமுள்ள பள்ளிகளில் விரைவில் இயந்திரம் வைக்கப்படும் என்றும் அதற்கான கால அவகாசம் வழங்க வேண்டும்.ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென தனியாக பொறுப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர். வழக்கறிஞரின் விளக்கங்களை கேட்டறிந்த நீதிபதி வழக்கு விசாரணையை விசாரணையை ஒத்திவைத்தார்.