தமிழகத்திற்கு வெளியேற்றும் தண்ணீரை குறைத்தது கர்நாடகம்..!!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கடந்த வாரம் 2 லட்சம் கனஅடி அளவுக்கு மேட்டூர் அணைக்கு தண்ணீரை  திறந்துவிடப்பட்டது கர்நாடகம் இந்நிலையில், கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால், உபரிநீர் வெளியேற்றப்படுவது முற்றிலுமாக  நிறுத்தப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் மட்டும் இப்பொழுது திறந்துவிடப்படுகிறது. ஒகேனக்கல்லுக்கு தற்போது 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர்வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, வரும் நாட்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.அப்படியும் மேட்டூர் அணை 3வது முறையாக நிரம்பியுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து அதே அளவு வெளியேற்றப்படுகிறது.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment